ஆசிட் வீச்சால் கொடுமையாக முகம் பாதிக்கப்பட்டிருந்த சந்திரலேகாவின் அம்மா ஒரு எழுத்தாளரென்பது லில்லி தெய்வசிகாமணி நினைவு இலக்கிய பரிசளிப்பு விழாவில் தான் பலருக்கும் தெரியவந்தது.
நீல.பத்மநாபனின் கூடவே உணவிற்கு கிளம்பிப்போனவர்களில் சந்திரலேகாவின் அம்மாவும் இருந்தார். கோவை உணவின் ருசியை அறிவதற்காக கைச்சோற்றை வாய்க்கு கொண்டுபோகும் தருணம் வெட்கங்கெட்ட பிரகிருதி சந்திரலேகாவின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட் கொடூரத்தை குறித்து விசாரிக்க...