பிணைக்கப்பட்ட சங்கிலிகள்
நீ சிரிக்கையில் குலுங்குகின்றன
உன் கூவலில் வந்திறங்கிய பட்டாளம்
மனவெளியை சிதைக்கின்றன
யாருமற்ற ராத்திரிகளில்
உன் அலறல்களின் பாடல்
தொலைத்த திறவுகோல்கள்
மந்திரவாதிகளின் புகைகூட்டில் நடனமிடுகின்றன
உன் தனிமையின் சொப்பனங்கள்
தருவித்த கடிதவரிகளில்
மலை நகருகிறது
நகரும் மலையால் உன் வீடு
கடலுள் தள்ளப்படுகிறது
நீ சுற்றிதிரிந்த
பிரேதேசங்களின்...