29/8/11

குந்தம் சாடிய வாழைநேற்று உன் கவிதைகளை வாசித்து கொண்டிருந்தேன்.
பரிதாபத்திற்குரிய வார்த்தைகள்.
பொருத்தமற்ற இடத்தில் கண்ணீரால் யாசித்திருந்தாய்.
என் இரக்கத்தின் ஊற்றுக்கண் வற்றி கொஞ்சகாலமாகிறது.
வாழ்வின் மீதான நம்பிக்கைகளே நகைப்பாய் மாறிவிட்ட
காலத்தில் வாழ்கிறோம் என்பதை உன்னால் உணரக்கூட
முடியவில்லையென்பதை உன் கவிதைகள் பல்லிளித்துக்கொண்டிருப்பதை வைத்தே
அறிந்துகொள்கையில் மெலிதான பயம் என்னை சூழ்கிறது.
தயவுசெய்து உன் குந்தம் சாடிய வாழைகளை அப்புறபடுத்திவிடு என் பார்வையிலிருந்து.

0 comments:

கருத்துரையிடுக